Contact Us

Name

Email *

Message *

Monday 21 October 2013

Shambu Natanam slokam


At Sandhya kalam (Pradosha kalam) Shiva dances at all places not only at Chidambaram. Wherever he dances, Pathanjali muni, Vyagrapada muni, Nandhi and Bhringi will be with him. While Bhringi and Nandhi stay with Shiva always, Pathanjali and Vyagrapadar are there whenever and wherever he dances.

Pathanjali is stated to be the Avatar of Adisesha and is depicted with a human face and the body of a snake. Vyagrapadar has also a human face and his legs are like that of a tiger with long nails. Nandhi, the divine vahana has two horns (Kombu, in Tamil) and four feet (Kaal in Tamil). Bhringi has three legs. Pathanjali was teased by the other three saying that he has neither Horn (Kombu) nor Kaal (legs).

Pathanjali gave a rejoinder stating that the other three have separate eyes and ears which was a disadvantage. If they concentrate on Ishwara’s dance form by seeing, they will miss the laya or thala and if they concentrate on the laya and listen, they will miss out on the visual treat. However, Pathanjali, in his serpent form, had a common organ for perceiving sound and sight (it was commonly believed that snakes make use of the same organs for hearing and seeing) and therefore could concentrate on both the form and laya simultaneously.

Pathanjali also stated that inspite of his not having Kombu and Kaal, he can appreciate the cosmic dance of Shiva better and will sing His praises. The trio of Nandi, Bhringi and Vyagrapadar teased Pathanjali further saying that he had no Kombu and Kaal and how will he sing Shiva’s praise without Kombu and Kaal. Pathanjali said that since he himself had no Kombu and Kaal, he will sing Shiva’s praise also with a slokam in which the letters had no Kombu or Kaal ( e E a etc.)

The Shambu natana slokam has no words with Kombu or Kaal. This was sung according to the laya/thala of Shiva’s cosmic dance.



- HH Sri Chandrasekharendra Saraswathi Swamigal


Shambu Natanam slokam
Lyrics in devanagiri (பொருள் - தமிழில்)
by Shri O.S. Arun


॥ श्रीपतञ्जलिकृत शम्भुनटनम्॥


सदञ्चितं उदञ्चित निकुञ्चितपदं झलझलञ्चलित मञ्जुकटकं
पतञ्जलि दृगञ्जनं अनञ्जनं अचञ्चलपदं जनन भञ्जनकरम्।
कदम्बरुचिं अम्बरवसं परमं अम्बुद कदम्बक विडम्बक गलं
चिदम्बुदमणिं बुध हृदम्बुज रविं पर चिदम्बर नटं हृदि भज॥१॥

ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலஞ்சலித மஞ்ஜுகடகம்
பதஞ்ஜலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜநம் அசஞ்சலபதம் ஜநநபஞ்சநகரம்।
கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத கதம்பக விடம்பக களம்
சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥1॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
புரம்எரித் தவன்அவன் அகம்அழித் தவன்சிவன்
விரைமனம் படைத்தவர் மனம்கவர்ந் திழுப்பவன்
எடுத்தகால் வளைத்துமே நடம்புரிந் திருப்பவன்
கரத்திருந்த கங்கணம் அசைவினில் மனம்தனில்
மயங்கிடும் விதம்தனில் எழுந்திடும் ஒலித்தொனி
செவிப்படும் களிப்புமே விளங்குநல் களிம்புமே
பதஞ்சலி சிதம்தனில் ஒளிச்சுடர் விளக்கதே
சிதம்தனில் படும்விதம் அவன்அருள் விளக்குதே
கலங்குமென் மனம்தனில் விளங்கிடச் செய்துமே
மலங்களும் இலையெனும் நிலைபெறும் மனத்திலே
தொடர்ந்திடும் விதம்வரும் பிறப்பிறப் பறுத்துமே
கடம்பிணை எழில்தனில் புனைதுகில் வானமே
விடம்உடைத் தநீலகண்டம் நீருடைத்த மேகமே
சுத்தசத்து ணர்வினில் எழும்பிடும் சுடர்மணி
சித்தர்சித் தலர்ந்திட வந்தசூரி யன்ஒளி

हरं त्रिपुर भञ्जनं अनन्त कृतकङ्कणं अखण्डदयं अन्त रहितं
विरिञ्चि सुरसम्हति पुरन्दर विचिन्तित पदं तरुण चन्द्र मकुटम्।
परं पद विखण्डित यमं भसित मण्डिततनुं मदन वञ्चन परं
चिरन्तनं अमुं प्रणत सञ्चित निधिं परचिदम्बर नटं हृदि भज॥२॥

ஹரம் த்ரிபுர பஞ்சநம் அநந்தக்ருத கங்கணம் அகண்டதயம் அந்தரஹிதம்
விரிஞ்சி ஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருண சந்த்ர முகுடம்।
பரம் பத விகண்டித யமம் பஸித மண்டித தநும் மதந வஞ்சந பரம்
சிரந்தநம் அமும் ப்ரணத ஸஞ்சித நிதிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥2॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
ஊழ்வகம் அழித்துமேல் பரம்தனை அளிப்பவன்
வீழ்ந்துமெய் தரைப்பட அரக்கனை அழித்தவன்
சூழுகின்ற மூவினை போன்றமுப் புரத்தினை
அழித்துமே எரித்தவன் வழுத்திடச் சிறந்தவன்
அனந்தனான பாம்பினைக் கரத்திலே அணிந்தவன்
மனம்எழும் அருள்மழை பொழிந்திடும் சிவன்இவன்
கணம்தனில் படைத்தழித் துவென்றுமே நிலைப்பவன்
படைத்தநான் முகன்தனும் கணங்களோடு மிந்த்ரனும்
தினம்இவன் பதம்தனை மனம்நினை சிவன்இவன்
பிறைமதிச் சிறப்புறும் ஒளிர்ந்திவன் சிரம்பட

अवन्तं अखिलं जगत् अभङ्गगुणतुङ्गं अमतं धृत विधुं सुरसरि-
त्तरङ्ग निकुरुम्ब धृति लम्पट जटं शमन डम्बर हरं भव हरम्।
शिवम् दश दिगन्तर विजृम्भित करं कर लसन् मृगशिशुं पशुपतिं
हरं शशि धनञ्जय पतङ्ग नयनं पर चिदम्बर नटं हृदि भज॥३॥

அவந்தம் அகிலம் ஜகத் அபங்ககுண துங்கம் அமதம் த்ருத விதும் ஸுரஸரித்
தரங்க நிகுரும்ப த்ருதி லம்பட ஜடம் ஸமந டம்பர ஹரம் பவ ஹரம்।
ஸிவம் தஸ திகந்தர விஜ்ரும்பித கரம் கர லஸந் ம்ருகஸிஸும் பஸுபதிம்
ஹரம் ஸஸி தநஞ்ஜய பதங்க நயநம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥3॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
சிறந்தபல் குணங்களில் உயர்ந்துமே இருப்பவன்
முயன்றநல் தவத்திலும் விளங்கிடா திருப்பவன்
நுதல்தனில் பிறைமதி சுடர்விடத் தரித்தவன்
சலச்சல வெனப்பெரும் ஒலிப்படச் சடைதனில்
பலத்துடன் விழுந்தபல் கங்கைகொண் டநீரலை
அடக்கியே சிறந்தவன் விடத்துடன் சிரிப்பவன்
யமன்தனின் தலைக்கனம் தனைத்தொலைத் தவன்இவன்
உழன்றிடும் உயிர்களின் பிறப்பிறப் பறுப்பவன்
பிறந்திடும் உயிர்களைக் புரந்துநிற்கு மரசவன்
தெரிந்தபல் திசைகளில் விரிந்திடும் கரத்தினில்
சிறந்தமான் எழில்பட நடம்செயும் திறத்தவன்
எழுந்ததீயும் சந்திரன் எரிந்திருக்கும் சூரியன்
தனைவிழி களாய்த்தரித் துமேஅழித் திடும்சிவன்


अनन्त नवरत्न विलसत्कटक किङ्किणि झलंझल झलञ्झलरवं
मुकुन्द विधि हस्तगत मद्दल लय ध्वनि धिमिद्धिमित नर्तन पदम्।
शकुन्तरथ बर्हिरथ नन्दिमुख दन्तिमुख भृङ्गि रिटि सङ्घ निकटं
सनन्द सनक प्रमुख वन्दित पदं परचिदम्बरनटं हृदि भज॥४॥

அநந்த நவரத்ந விலஸத்கடக கிங்கிணி சலம்சல சலம்சலரவம்
முகுந்த விதி ஹஸ்தகத மத்தல லய த்வநி திமித்திமிதநர்த்தந பதம்।
ஸகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கி ரிடி ஸங்க நிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥4॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
கரத்தணிந்த கங்கணம் ஒலிக்குமந்த கிண்கிணி
சிறப்புறப் பதிந்துமே ஒளிர்ந்திடும் எழில்மணி
நிறைந்தெழில் சிதம்பரன் இடும்நடம் தனக்குமே
நான்முகன் முகுந்தனும் திமித்தக தகத்திமி
எனப்பறை முழங்கிட சிறந்தமால் உடன்வரும்
பெரும்ரதம் தனைக்கரு டனும்இழுத் துவந்திட
சிறந்தகந் தனும்மயில் தனில்அழ குடன்வர
திரண்டநல் கணங்களும் ரிதிப்பிருங்கி ஸ்ருங்கியும்
கூடநந்தி வந்திடச் சனகரும் சனந்தரும்
மற்றமுனி புங்கவர் களும்வரச் சிரம்பட
சென்றுமே பணிந்திட அருள்புரிந்த தேஅவன்
நின்றுமே களித்திட நடம்புரிந்த தேசிவன்

अनन्त महिमं त्रिदश वन्द्य चरणं मुनि हृदन्तर वसन्तं अमलं
कबन्ध वियदिन्द्ववनि गन्धवह वह्नि मखबन्धु रवि मञ्जु वपुषम्।
अनन्त विभवं त्रिजगदन्तरमणिं त्रिणयनं त्रिपुर खण्डन परं
सनन्द मुनि वन्दित पदं सकरुणं पर चिदम्बर नटं हृदि भज॥५॥

அநந்த மஹிமம் த்ரிதஸ வந்த்ய சரணம் முநி ஹ்ருதந்தர வஸந்தம் அமலம்
கபந்த வியதிந்த்வவநி கந்தவஹ வந்ஹி மகபந்து ரவி மஞ்ஜு வபுஷம்।
அநந்த விபவம் த்ரிஜகதந்தர மணிம் த்ரிணயநம் த்ரிபுர கண்டந பரம்
ஸநந்தமுநி வந்திதபதம் ஸகருணம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥5॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
ஆதியந்த மற்றஜோதி மலைமகள் இவனில்பாதி
தீதிலாத தேவர்மற்ற கடவுளரும் பணிவர்ஓதி
சூதிலாத முனிவர்நெஞ்சில் உறையும்மாசி லாதஜோதி
நீரும்வானும் நிலவும்மண்ணும் வீசுகின்ற காற்றிலேதீ
சீரின்ஆன்மம் சூரியனும் கொண்டமேனிக் கூற்றிலே நீ
எல்லையற்ற செல்வம்கொண்ட மூவுலகின் தலையுமேநீ
முக்கண்மூர்த்தி யாகிமூன்று புரம்எரித்த ஜோதியேநீ
இடர்களைத யாபரன்நீ சனந்தரின் சதாசிவம் நீ

अचिन्त्यं अलिबृन्द रुचिबन्धुर गल स्फुरित कुन्द निकुरुम्ब धवलं
मुकुन्द सुरबृन्द बलहन्तृ कृतवन्दन लसन्तं अहिकुण्डल धरम्।
अकम्पं अनुकम्पित रतिं सुजन मङ्गल निधिं गजहरं पशुपतिं
धनञ्जय नुतं प्रणत रञ्जन परं परचिदम्बर नतं हृदि भज॥६॥

அசிந்த்யம் அளிப்ருந்த ருசிபந்துர கல ஸ்புரித குந்த நிகுரும்ப தவலம்
முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தந லஸந்தம் அஹிகுண்டல தரம்।
அகம்பம் அநுகம்பித ரதிம் ஸுஜந மங்கல நிதிம் கஜஹரம் பஸுபதிம்
தநஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜந பரம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥6॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
மனத்தினால் நினைத்துமே அறிந்திடப் படாததேன்
விடத்தினால் கருத்துமே விளங்குகண்ட மானதே
மலர்ப்படப் பறந்திடும் சிறந்தவண்டு போன்றதே
உடலின்தூய வெண்ணிறம் மலர்ந்துதோன்றும் குந்தலம்
படரும் பக்திதன்னுடன் மாலும்தேவர் கோனுமே
சுடலைநாதன் தன்னையே வணங்குகின்ற போதிலே
சுடரின்சோதி யாகவே ஒளிருகின்ற தானவன்
செவியிலாடும் குண்டலம் புவியிலோடும் சர்ப்பமே
பயப்படாத மனத்தினன் அசைந்திடாத ஒருத்தனே
புலன்வயப் படும்மதன் துணைரதி வணங்கிட
மனம்தனில் எழும்அருள் தனில்வரம் வழங்கினான்
நன்மனம் உளோர்தொழும் சிவன்இவன் சிறந்தவன்
துன்மதி கஜாசுரன் தனைவதம் புரிந்தவன்
நன்மதி அருச்சுனன் பணிந்திடும் சிவன்இவன்
பணிந்திடும் உயிர்களின் மனம்மகிழ் இறைஇவன்

परं सुरवरं पुरहरं पशुपतिं जनित दन्तिमुख षण्मुखं अमुं
मृडं कनक पिङ्गल जटं सनक पङ्कज रविं सुमनसं हिम रुचिम्।
असङ्ग मनसं जलधि जन्म गरलं कबलयन्तं अतुलं गुणनिधिं
सनन्दवरदं शमितं इन्दुवदनं पर चिदम्बर नटं हृदि भज॥७॥

பரம் ஸுரவரம் புரஹரம் பஸுபதிம் ஜநித தந்திமுக ஷண்முகம் அமும்
ம்ருடம் கநக பிங்கள ஜடம் ஸநக பங்கஜ ரவிம் ஸுமநஸம் ஹிமருசிம்।
அஸங்க மநஸம் ஜலதி ஜந்ம கரளம் கபலயந்தம் அதுலம் குண நிதிம்
ஸநந்த வரதம் ஸமிதம் இந்துவதநம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥7॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
தெய்வங்களில் சிறந்தவன் புரங்கள் மூன்றை எரித்தவன்
தடங்கல்களை நீக்கிடவே கணபதியைப் படைத்தவன்
தேவர்படை நடத்திடவே அறுமுகனைப் படைத்தவன்
அருள்தரும் இவன்சடை சிவந்தபொன்னு மானவன்
மலர்களும் மலர்ந்திட ஒளிருகின்ற சூரியன்
உயிர்களும் மகிழ்ந்திட குளிருகின்ற பனியவன்
மயங்கிடும் விதம்மனம் உமையிலும் இலாதவன்
கடல்எழும் விடம்தனை குடித்துவையம் காத்தவன்
கடல்எனும் விதம்பல சிறந்தநல் குணத்தவன்
சனந்தரும் மகிழ்ந்திடும் வரம்தரும் சிவன்இவன்
பிறைமதி தனில்எழில் முகம்தனில் ஒளிர்பவன்
நிறைந்திடும் மனம்தனில் சுத்தசத்வ மானவன்

अजं क्षितिरथं भुजगपुङ्गव गुणं कनक शृङ्गि धनुषं करलसत्
कुरङ्क पृथु टङ्क परशुं रुचिर कुङ्कुम रुचिं डमरुकं च दधतम्।
मुकुन्द विशिखं नमदवन्ध्य फलदं निगम बृन्द तुरगं निरुपमं
स चण्डिकं अमुं झटिति संहृत पुरं पर चिदम्बर नटं हृदि भज॥८॥

அஜம் க்ஷிதிரதம் புஜக புங்கவ குணம் கநக ஸ்ருங்கி தநுஷம் கரலஸத்
குரங்க ப்ருது டங்க பரசும் ருசிர குங்குமருசிம் டமருகஞ்ச தததம்।
முகுந்த விஸிகம் நமதவந்த்ய பலதம் நிகம ப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டிகம் அமும் ஜடிதி ஸம்ஹ்ருத புரம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥8॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
உழன்றிடும் விதம்தனில் பிறப்பிலா சிறப்பவன்
சுழன்றிடும் உலகைத்தன் ரதம்எனப் பறந்தவன்
பொன்னின்சிகரம் மேருவை வில்லுமாய் எடுத்தவன்
பாம்பில்சிறந்த வாசுகி அம்புமாய்த் தொடுத்தவன்
கரம்தனில் மானுடன் மழுவும்வாளும் கொண்டவன்
ஒலித்திடச் சிவந்தநல் லுடுக்கைகொண் டிருப்பவன்
ஒளிர்ந்திடும் முகுந்தனை அம்புமாகக் கொண்டவன்
பணிந்திருக்கு மானபத்தர் தனக்கருள் புரிந்தவன்
கனிந்துமோது வேதம்தன்னை மனம்தனில் தரித்தவன்
சண்டியோ டிணைந்துமுப் புரம்எரித்த தேவனாம்

अनङ्ग परिपन्थिनं अजं क्षिति धुरंधरं अमलं करुणयन्तं अखिलं
ज्वलन्तं अनलं दधतं अन्तकरिपुं सततं इन्द्रसुर वन्दित पदम्।
उदञ्चत् अरविन्द कुल बन्धु शतबिम्ब रुचि संहति सुगन्धि वपुषं
पतञ्जलि नुतं प्रणव पञ्जर शुकं पर चिदम्बर नटं हॄदि भज॥९॥

அநங்க பரிபந்திநம் அஜம் க்ஷிதி துரந்தரம் அமலம் கருணயந்தம் அகிலம்
ஜ்வலந்தம் அனலம் தததம் அந்தகரிபும் ஸததம் இந்த்ரஸுர வந்தித பதம்।
உதஞ்சத் அரவிந்த குல பந்து ஸதபிம்ப ருசி ஸம்ஹதி ஸுகந்நி வபுஷம்
பதஞ்ஜலி நுதம் ப்ரணவ பஞ்ஜர ஸுகம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ॥9॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
பிறப்பறுத் தவன்மதன் தனைஎரித் தவன்சிவன்
சிறப்புறப் புவி தனைக் காத்துநிற்கு மிறையிவன்
சுரந்துநிற்கும் கருணையால் அருள்புரிந்த அன்னையாம்
இறந்துவீழ அந்தகன் தனைஅழித்த வீரனாம்
எறிந்தெழும்பும் தீயினைப் பிடித்திருக்கும் ஒருவனாம்
சிறந்திருக்கு மிந்த்ரனும் பணியும்நல்ல தேவனாம்
ஒளிர்ந்துநிற்கும் சூரியன் நூறின்நூறு மானவன்
விரைந்தெழும்பும் நல்மணம் கமழுகின்ற மேனியன்
பதம்தனில் பதஞ்சலி பணிந்துமேத்து மோர்சிவன்
துதித்தநெஞ்சக் கூட்டினில் கிளியுமான பிரணவமாம்

इति स्तवं अमुं भुजग पुङ्गव कृतं प्रतिदिनं पठति यः कृतमुखः
सदः प्रभु पदद्वितय दर्शनपदं सुललितं चरण शृङ्ग रहितम्।
स्मरः प्रभव संभव हरित्पति हरि प्रमुख दिव्य नुत शङ्करपदं
स गच्छति परं न तु जनु र्जलधिं परम दुःख जनकं दुरितदम्॥१०॥

இதி ஸ்தவம் அமும் புஜக புங்கவ க்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:
ஸத: ப்ரபு பதத்விதய தர்சநபதம் ஸுலலிதம் சரண ஸ்ருங்க ரஹிதம்।
ஸர: ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரி ப்ரமுக திவ்ய நுத ஸங்கரபதம்
ஸ கச்சதி பரம் ந து ஜநுர் ஜலநிதிம் பரம து:க ஜநகம் துரிததம்॥10॥

சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
சிறந்தபாம் பனந்தனே மண்தனில் பதஞ்சலி
புனைந்தவிந்த தோத்திரம் தரும்சிறந்த தோரிடம்
மனம்படிந்து ஓதிட விளங்குமந்த பாதமும்
முதல்முடி விலாததாய் கடல்அலைப் போலாதலால்
நுதல்தனில் எழும்சுடர் தரும்சிவன் பதம்தரும்
படைத்தநான் முகன்தனும் கிடந்தகோல மாலனும்
போற்றுகின்ற தேவனைத் துதித்திடும் விதம்இரும்
இதைப்படிப் பவர்சிதம் தனில்சிவம் தெரிந்திடும்
வதைத்திடும் பிறப்பிறப் பினைக்களைந் தெறிந்திடும்
பதஞ்சலி துதித்திடும் வரம்தரும் சதாசிவம்
தினம்மனம் நினைத்திடும் சிதம்தனில் வரும்சிவம்



Courtesy: Kanchi Sri Mutt.

No comments:

Post a Comment