Contact Us

Name

Email *

Message *

Sunday 15 December 2013

மகான்களின் தரிசனம் - மேலவாஞ்சூர் சற்குரு ஸ்ரீ ரெங்கையா சுவாமிகள்

ஸ்ரீ சற்குரு தோத்திரம்

எங்கும் நிறைந்து எழுகின்ற சோதியை
அங்கத்தில் கண்ட அருளமுதமாம்-எங்கள்
இரங்கையா என்ற எழிற்குரு பாதம்
சிரங்கொண்டே எந்நாளும் சேர்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையான பரம்பொருள் தன்னை ஆன்மாக்கள் அறிந்து உய்தற் பொருட்டு எடுத்துக்கொண்ட வடிவங்கள் குரு-லிங்க-சங்கமமென மூன்று வடிவங்களாகும். அவற்றுள் பரிபக்குவமுள்ள ஆன்மாக்களின் தகுதிக்கேற்ப பரம்பொருள் அறியப் படும்.

பரம்பொருளை இவ்வாறு அறிந்தவர்கள் சித்தர்கள் –மகான்கள், இவர்கள் தங்களுடைய நலன்களை பொருட்படுத்தாமல் உலக மக்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற நோக்கில் பல சித்திகள் புரிந்து சிவத்தில்-பரம்பொருளில் தன்னை ஐக்கியப் படுத்தி கொண்டார்கள்.

இத்தகைய வாழையடி வாழையாக வந்த சித்தர்களில் ஸ்ரீரெங்கையா சுவாமிகளும் ஒருவர். இவர் சுமார் 350-400 ஆண்டுகளுக்கு முன்( கி.பி 16ம் நூற்றாண்டில்) வசித்திருக்கலாம் என்று செவி வழி செய்தியாக அறிய முடிகிறது.

இவர் சாதி, இன வேறுபாடில்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்றும், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் பெரிதும் பாடுப்பட்டிருக்கிறார்.

இவருக்கு மாசி மாதம் மக நட்சத்திர நன்னாளில் குரு பூஜை செய்யப்படுகிறது

ஜீவ சமாதி இருக்குமிடம்

காரைக்கால் – நாகூர் பிரதான பேருந்து சாலையில் மேலவாஞ்சூர் அமைந்துள்ளது.



நன்றி: http://www.siddharstamilnadu.blogspot.in

No comments:

Post a Comment