Contact Us

Name

Email *

Message *

Friday 5 December 2014

Soundarya Lahari - Sloka: 1


Beneficial Results: 
ஸகல கார்ய ஸித்தி Winning in every field.
All prosperity, granting of cherished purposes and solution to intricate problems.


शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वाम् आराध्यां हरि-हर-विरिन्चादिभि रपि
प्रणन्तुं स्तोतुं वा कथ-मक्र्त पुण्यः प्रभवति ॥ १ ॥

ஸகல கார்ய ஸித்தி

ஸிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி |
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி  || 1 ||

சிவன், சக்தியான உன்னுடன் இருப்பதாலேயே (யதி பவதி) ஈஸ்வரனுக்கு பிரபஞ்சத்தை ஆக்கும் சக்தி கிடைக்கிறது. அவ்வாறு உன்னுடன் சிவன் இல்லாவிடில் (ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி). ஆகவே ஹரி-ஹர-பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்க்கோ (ப்ரணந்தும்), துதிப்பதற்கோ (ஸ்தோதும் வா) எவ்வாறு தகுதியுடையவனாவான். அதாவது பராசக்தியை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே பூர்வபுண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறார்.

மும்மூர்த்திகளையும் இயக்கும் சக்தியே பராசக்தி. அந்த சக்தியின் துணை கொண்டுதான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரங்கள் நடக்கிறது.அந்த சக்தியினை பணிந்து போற்றுவதற்கும் நல்ல ஊழ்வினை செய்திருக்க வேண்டும் என்கிறார்.

ஸ்பந்திதும் - அசைவதற்கு; அபி - கூட;
ந கலு குசல: - திராணியில்லாமை; விரிஞ்சாதி - பிரும்மா;

தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்று ஒரு வரி வரும்.அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பதாக அர்த்தம்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 12

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ஸ்ரீஆதிசக்தி
  • ஸ்ரீசிவா
  • சிவபரா
  • சிவசக்த்யைக்யரூபிணீ 
  • சிவாராத்யா
  • ஹரிப்ரஹ்மேந்த்ரஸேவிதா 
  • புண்யலப்யா

śivaḥ śaktyā yukto yadi bhavati śaktaḥ prabhavituṃ
na cedevaṃ devo na khalu kuśalaḥ spanditumapi |
atastvām ārādhyāṃ hari-hara-virincādibhi rapi
praṇantuṃ stotuṃ vā katha-makrta puṇyaḥ prabhavati || 1 ||

Lord Shiva, only becomes able.
To do creation in this world along with Shakthi
Without her, Even an inch he cannot move,
And so how can, one who does not do good deeds,
Or one who does not sing your praise,
Become adequate to worship you
Oh , goddess mine, Who is worshipped by the trinity.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:1, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.675-686, Deivathin Kural) and (Digest of pp.737-743, Deivathin Kural 6th Vol. 4th imprn)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment