Contact Us

Name

Email *

Message *

Tuesday 3 February 2015

Soundarya Lahari - Sloka: 5


Beneficial Results: 
ஸ்த்ரீ புருஷ வசியம் Mutual attraction between male and female
Power to fascinate men and women, entice people (contentment in all areas of life)


हरिस्त्वामारध्य प्रणत-जन-सौभाग्य-जननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभ मनयत् ।
स्मरो‌உपि त्वां नत्वा रतिनयन-लेह्येन वपुषा
मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥ ५ ॥

தேவி பூஜையின் மஹிமை/ஸ்த்ரீ புருஷ வசியம்

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜன ஸெளபாக்ய ஜனனீம் 
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப-மனயத் |
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதி நயந-லேஹ்யேந வபுஷா
முனீனா-மப்-யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் || 5 ||

(ப்ரணத-ஜன-ஸெளபாக்ய-ஜனனீம்) வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸெளபாக்கியத்தையும் தரும் உன்னை (ஹரி:) விஷ்ணு பூஜித்து (புரா) முன்னொரு சமயம் (நாரீ பூத்வா) பெண் உருவம் கொண்டு (புரரிபும் அபி) முப்புரம் எரித்த பரமசிவனையுங் கூட (க்ஷோபம்) மனம் சலிக்கும்படி(அனயத்) கவர்ந்தார். (ஸ்மர: அபி) மன்மதனும் (த்வாம்) உன்னை (நத்வா) வணங்கி (ரதி-நயன-லேஹ்யேன-வபுஷா) ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங்கொண்டு (மஹதாம்) மகான்களான (முனீனாம் அபி) முனிவர்களும் கூட (அந்த:) அந்தரங்கத்தில் (மோஹாய) மதிமயக்கம் உண்டாகும்படி (ப்ரபவதி ஹி) செய்கிற சக்தி பெறுகிறான் என்பது நிச்சயம்.

பரமசிவனால் எரிக்கப்பட்ட மன்மதன், தேவியின் கடாஷத்தால் மற்றவர்களுடைய கண்ணுக்குப் புலப்படாமல், தன் மனைவியான ரதியின் கண்களூக்கு மட்டும் புலப்படும்படியான ஸீக்ஷ்ம சரீரத்தை அடைந்ததாக காஞ்சீ மகாத்மீயம் கூறுகிறது. "ஹர-நேத்ராக்னி-ஸ்ந்தக்த-காம-ஸஞ்ஜீவ-நெளஷதி:" என்பது லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 84ஆவது நாமாவளி, அதாவது சிவபெருமானால் எரிக்கப்பட்ட மன்மதனை பிழைக்கவைத்த சஞ்சீவினி மருந்தே என்று அன்னையை விளிப்பதாகப் பொருள்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 97

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • நாராயணீ
  • விஷ்ணுமாயா 
  • க்ஷோபிணீ 
  • சம்புமோஹிநீ
  • கமலாக்ஷ நிஷேவிதா
  • மோஹிநீ
  • காமபூஜிதா

haristvāmāradhya praṇata-jana-saubhāgya-jananīṃ
purā nārī bhūtvā puraripumapi kṣobha manayat |
smaro‌உpi tvāṃ natvā ratinayana-lehyena vapuṣā
munīnāmapyantaḥ prabhavati hi mohāya mahatām || 5 ||

You who grant all the good things,
To those who bow at your feet,
Was worshipped by the Lord Vishnu,
Who took the pretty lovable feminine form,
And could move the mind of he who burnt the cities,
And make him fall in love with him.
And the God of love , Manmatha,
Took the form which is like nectar,
Drunk by the eyes by Rathi his wife,
After venerating you,
Was able to create passion ,
Even in the mind of Sages the great.



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment