Contact Us

Name

Email *

Message *

Wednesday 26 August 2015

Bhaja Govindaṁ - Verse 2


मूढ जहीहि धनागमतृष्णां 
कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् । 
यल्लभसे निजकर्मोपात्तं 
वित्तं तेन विनोदय चित्तम् ॥ २॥

हे मोहित बुद्धि! धन एकत्र करने के लोभ को त्यागो। अपने मन से इन समस्त कामनाओं का त्याग करो। सत्यता के पथ का अनुसरण करो, अपने परिश्रम से जो धन प्राप्त हो उससे ही अपने मन को प्रसन्न रखो.

mūḍha jahīhi dhanāgamatṛṣṇāṁ 
kuru sadbuddhiṁ manasi vitṛṣṇām |
yallabhase nijakarmopāttaṁ 
vittaṁ tena vinodaya cittam || 2 ||

Oh fool ! Give up your thirst to amass wealth, devote your mind to thoughts to the Real. Be content with what comes through actions already performed in the past.

மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் 
குரு சத்புத்திம் மனசி வித்ருஷ்ணாம் |
யல்லபசே நிஜகர்மோபாத்தம் 
வித்தம் தேன விநோதயசித்தம் || 2 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

விவேகமற்றவனே!
பொருள் வரவேண்டும் என்ற பேராசையை ஒழித்துவிடு.  மனதில் பேராசை இல்லாத நல்ல புத்தியை நாடு.  உனக்கு உரித்தான கருமத்தால் எந்த பொருளை அடைகிறாயோ, அதனால் சித்தத்தை இன்புறச் செய்வாயாக.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

சொந்தமிது சொந்தமென
சொத்து சுகம் சேர்த்துவிட
தொலையா தெழுந்த மோகம்!

தொத்திவரும் நோயதனை
புத்திவழி வெல்லுவது
தூயவர்கள் செய்யும் யாகம்!

சந்ததமும் பாடுபடு
வந்தவரை நிம்மதிகொள்
தங்குவது தெய்வ யோகம்!

தத்துவம் இதற்குளொரு
தன்னமைதி தோன்றிவிடும்
சாகும்வரை இன்ப ராகம்!

அந்தமிலை ஆதியிலை
என்றபடி நின்றுலவும்
அண்ணலடி பற்று தினமே!

ஐயனவன் மெய்யனவன்
ஆயர்குல நேயனவன்
அன்னவனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment