Contact Us

Name

Email *

Message *

Thursday 22 October 2015

Bhaja Govindaṁ - Verse 10


वयसिगते कः कामविकारः 
शुष्के नीरे कः कासारः । 
क्षीणेवित्ते कः परिवारः 
ज्ञाते तत्त्वे कः संसारः ॥ १०॥

आयु बीत जाने के बाद काम भाव नहीं रहता, पानी सूख जाने पर तालाब नहीं रहता, धन चले जाने पर परिवार नहीं रहता और तत्त्व ज्ञान होने के बाद संसार नहीं रहता.

vayasigate kaḥ kāmavikāraḥ 
śuṣke nīre kaḥ kāsāraḥ |
kśīṇevitte kaḥ parivāraḥ 
jñāte tattve kaḥ saṁsāraḥ || 10 ||

What good is lust when youth has fled ? What use is a lakewhich has no water ? Where are the relatives when wealth is gone ? Where is samsAra, the world, when the Truth is known ?

வயசிகதே க: காமவிகார: 
சுஷ்கே நீரே கஹ காசார:
க்ஷீனேவித்தே க: பரிவார: 
ஞாதே தத்வே க: சம்சார: || 10 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

வயது கடந்தபின் காம விகாரம் ஏது? தண்ணீர் வற்றியபின் குளம் ஏது? செல்வம் அழிந்தபின் சுற்றம் ஏது? தத்துவத்தை அறிந்தபின் சம்சாரம் ஏது?

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

ஓடிடும் இரத்தமது
உள்ளவரை தான்உனது
உள்ளாசை காம நிலையும்!

ஊறுவது நின்றுவிட
ஓடுவதும் நின்றுவிடும்
உன்னாசை ஓடி மறையும்!

நாடுவது சென்றுவிட
நாடியவர் ஓடிவிட
ஞானநிலை தோன்றி வளரும்!

ஞானநிலை தோன்றியபின்
ஈனநிலை மாறிவிடும்
நல்லகதி தன்னை யடையும்!

வீடுவரை வந்துசெலும்
வெட்டவெளிக் கற்பனையில்
வீங்குவதில் என்ன பயனே?

வேதியனை மாதவனை
வீரர்களின் தூதுவனை
வினைதீரப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment