Contact Us

Name

Email *

Message *

Thursday 5 November 2015

Bhaja Govindaṁ - Verse 12


दिनयामिन्यौ सायं प्रातः 
शिशिरवसन्तौ पुनरायातः । 
कालः क्रीडति गच्छत्यायुः 
तदपि न मुञ्चत्याशावायुः ॥ १२॥

दिन और रात, शाम और सुबह, सर्दी और बसंत बार-बार आते-जाते रहते है काल की इस क्रीडा के साथ जीवन नष्ट होता रहता है पर इच्छाओ का अंत कभी नहीं होता है.

dinayāminyau sāyaṁ prātaḥ 
śiśiravasantau punarāyātaḥ |
kālaḥ krīḍati gacchatyāyuḥ 
tadapi na muñcatyāśāvāyuḥ || 12 ||

Daylight and darkness, dusk and dawn, winter and springtime come and go. Time plays and life ebbs away. But the storm of desire never leaves.

தினயாமின்யௌ சாயம் ப்ராத: 
சிஷிரவஸந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத்யாயு: 
ததபி ந முஞ்சத்யாஷாவாயு: || 12 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

பகலும், இரவும், மாலையும், காலையும், குளிர் காலமும், வசந்த காலமும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலம் விளையாடுகின்றது, ஆயுள் செல்கின்றது, என்றாலும் ஆசாபாசம் விடுவதில்லை.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம் 

காலமெனும் தேவியவள்
ஆடுகின்ற மேடைதனில்
காற்றுமழை கோடை மலரும்!

கால்மிதியில் ஓரடிஉன்
ஆயுளை அறுப்பதெனக்
காலம் வரும்போது புரியும்!

காலைவரும் மாலைவரும்
இரவுவரும் உன்வயதின்
கணக்கினிலே ஒன்று குறையும்!

கற்பனையில் ஊறிவரும்
சிற்றறிவை விட்டுவிடு
கடவுளவன் பாதை தெரியும்!

ஆலிலையைப் போலஒரு
நூலிழையில் உனதுஉயிர்
ஆடுவதில் என்ன பயனே!

அஞ்சுதலை வென்றவனை
ஆதிமறை மூலவனை
அநுதினமும் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment