Contact Us

Name

Email *

Message *

Friday 11 December 2015

பிராமணனின் வலது கை

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் சின்னபொம்ம அரசனை ஆசீர்வதிக்கும் போது எப்பொழுதும் இடது கையில் ஆசிர்வதிப்பார். இதையே அரசனிடம் குற்றமாகக் கூறி அப்பய்ய தீக்ஷிதர் உங்களை இடது கையினால் ஆசீர்வதிப்பது அவரது செருக்கினைக் காட்டுகிறது என்று கூறி அவனது மனதைக் கலைக்க முயன்றார் தாதாசாரியர். அரசனும் இதை தீக்ஷிதரிடமே கேட்டு விட்டான்.

மறுநாள் சபையில் இதைப் பற்றிய விசாரம் வரும் போது மற்றைய பண்டிதர்கள் அனைவரும் மெளனமாக இருந்தார்கள். தீக்ஷிதேந்திரர் உடனே எழுந்து சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வண்ணம் உண்மையான ஒரு பிராமணனின் வலது கையில் அக்னி இருப்பதால் அந்த பிராமணன் தனது இடதுகையினால் தான் ஆசீர்வதிக்க வேண்டும். எந்த வஸ்துவை நோக்கி அந்த பிராமணனின் கை தூக்கப்படுகிறதோ அது அவனது கையின் அக்னியால் எரிந்து விடும் என்று கூறினார்.

இந்த விளக்கத்தை ஏற்க மற்றையோர் தயக்கம் காட்டினர். அத்தகைய அக்னி தீக்ஷிதரின் வலது கரத்தில் இருக்கிறதா என்று அறிய விரும்பினர். தீக்ஷிதர் உடனே ஒரு வஸ்திரத்தில் அரசனைப் போன்று படம் எழுதி வரச் சொல்லி அந்த உருவத்தினை நோக்கித் தனது வலது கரத்தினைக் காட்டினார். அக்னி ஜ்வாலை தாங்க முடியாமல் உடனே அந்த வஸ்திரம் எரிந்து சாம்பலாயிற்று. உடனே அரசன் தீக்ஷிதரை வணங்கி அக்னியை அடக்கிக் கொள்ளும்படிச் செய்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அரசனுக்கு தீக்ஷிதரிடம் பக்தி மிகவும் அதிகமாகியது.



நன்றி: http://www.shaivam.org/

No comments:

Post a Comment