Contact Us

Name

Email *

Message *

Thursday 28 January 2016

Bhaja Govindaṁ - Verse 23


Stanza attributed to nityanAtha. 

कस्त्वं कोऽहं कुत आयातः 
का मे जननी को मे तातः । 
इति परिभावय सर्वमसारम् 
विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥ २३॥ 

तुम कौन हो, मैं कौन हूँ, कहाँ से आया हूँ, मेरी माँ कौन है, मेरा पिता कौन है? सब प्रकार से इस विश्व को असार समझ कर इसको एक स्वप्न के समान त्याग दो .

kastvaṃ ko‌haṃ kuta āyātaḥ
kā me jananī ko me tātaḥ |
iti paribhāvaya sarvaṃasāraṃ
visvam tyaktvā svapna vicāram || 23 || 

Who are you ? Who am I ? From where do I come ? Who is my mother, who is my father ? Ponder thus, look at everything as essence-less and give up the world as an idle dream.

கஸ்த்வம் கோ‌ஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத: |
இதி பரிபாவய ஸர்வமஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் || 23 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? என் தந்தை யார்? -என்றிவ்வாறு எண்ணி உலகனைத்தும் சாரமற்றது என்றும், கனவிற்கொப்பானது என்றும் துறந்து அலட்சியம் செய்வாயாக.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

அன்னைஎந்த அன்னைஇன்று
அப்பனெந்த அப்பனன்று
அன்னையாரோ முற்பிறப் பிலே?

ஆயிரங்க ளாகவந்த
தாயினங்கள் யாவரென்று
யாரறிவார் இப்பிறப் பிலே?

தன்னைஎண்ணித் தான்பிறந்த
தன்மைஎண்ணிக் காலம்யாவும்
தாமென நிமிர்ந்து நிற்பதோ?

தாயுமில்லை தந்தையில்லை
ஊருமில்லை பேருமில்லை
தத்துவத்தை என்று கற்பதோ?

உன்னைஎண்ணும் போதுஅந்த
உலகையாளும் சக்திதன்னை
உணர்ந்துகொளல் என்றும் நலமே!

ஓட்டிவந்த தேரைக்கூட
சாட்டையின்றி ஓட்டிவந்த
உத்தமனைப் பாடு மனமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment