Contact Us

Name

Email *

Message *

Sunday 27 March 2016

Atmarpanastuti - Sloka 14




प्राणॊत्क्रान्तिव्यतिकरदलत्सन्धिबन्धॆ शरीरॆ
प्रॆमावॆशप्रसरदमिताक्रन्दितॆ बन्धुवर्गॆ ।
अन्तः प्रज्ञामपि शिव भजन्नन्तरायैरनन्तै
राविद्धॊऽहं त्वयि कथमिमामर्पयिष्यामि बुद्धिम् ॥ १४ ॥

ப்ராணோத்க்ராந்திவ்யதிகரதலத்ஸந்திபந்தே சரீரே
ப்ரேமாவேசப்ரஸரதமிதாக்ரந்திதே பந்துவர்க்கே |
அந்த: ப்ரஜ்ஞாமபி சிவ பஜந்நந்தராயைரநந்தை:
ராவித்தோஹம் த்வயி கதமிமாமர்ப்பயிஷ்யாமி புத்திம் || 14 ||

அப்படியே சுய உணர்வில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் மனத்தை உன்னிடம் ஈடுபடுத்துவது அஸாத்யமான காரியம். ஏனெனில் பிராணன் வெளிக்கிளம்பும் ஸமயத்தில் ஒவ்வொரு பூட்டுகளிலிருந்தும் கிளம்ப எத்தனிக்கும் பிராண வாயுவினால் ஏற்படும் மரணவலியை உணர்த்துமேயொழிய அந்த பிரஜ்ஞை பிரயோஜனப்படுத்திக் கொள்ளகூடியதாக ஆகாது. சரீரத்திற்குள் இந்த வேதனையிருக்க, வெளியில் பந்து மித்திரர்கள், அன்பின் மிகுதியினால் கூக்குரலிட்டு அழுது கொண்டிருப்பார்கள். ஆதலால் அந்தக்கூச்சலினிடையே மனத்தைத்திருப்பி உன்னிடம் நாட்டுவதும் ஸாத்தியமாகாது. இவ்விதம் பல இடையூறுகளால் எனக்கு அந்த்ய காலத்தில் உணர்விருப்பினும் மனத்தை உம்மிடம் ஒப்படைக்க நான் இயலாதவனாகவே ஆவேன்.

prANOtkrAntivyatikaradalatsandhibandhE sharIrE
prEmAvEshaprasaradamitAkranditE bandhuvargE |
antaH praj~jAmapi shiva bhajannantarAyairanantai
rAviddhO&haM tvayi kathamimAmarpayiShyAmi buddhim || 14 ||

At the time life leaves my body, and all my limbs have become weak, and my relatives cry uncontrollably out of affection for me, even if I am conscious, O Lord, how can I concentrate my mind on You when distracted by so many obstructions!     



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment