Contact Us

Name

Email *

Message *

Thursday 3 March 2016

Bhaja Govindaṁ - Verse 28


Stanza attributed to sumatir.

सुखतः क्रियते रामाभोगः
पश्चाद्धन्त शरीरे रोगः ।
यद्यपि लोके मरणं शरणं
तदपि न मुञ्चति पापाचरणम् ॥ २८॥

सुख के लिए लोग आनंद-भोग करते हैं जिसके बाद इस शरीर में रोग हो जाते हैं। यद्यपि इस पृथ्वी पर सबका मरण सुनिश्चित है फिर भी लोग पापमय आचरण को नहीं छोड़ते हैं.

sukhataḥ kriyate rāmābhogaḥ 
paścāddhanta śarīre rogaḥ |
yadyapi loke maraṇaṁ śaraṇaṁ 
tadapi na muñcati pāpācaraṇam  || 28 ||

He who yields to lust for pleasure leaves his body a prey to disease. Though death brings an end to everything, man does not give-up the sinful path.

ஸுகத: க்ரியதே ராமாபோக:
பஶ்சாத்தன்த ஶரீரே ரோக: |
யத்யபி லோகே மரணம் ஶரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம் || 28 ||

கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.

சுகமாக மாதர் போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான். ஐயோ பாவம்! முடிவில் உடலில் ரோகத்தை அனுபவிக்கிறான். உலகில் மரணம்தான் முடிவில் எல்லோரும் அடைவது என்று தெரிந்திருந்தும் பாவம் செய்வதை விடுவதில்லை.

கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்.

காதல்மாதர் போதைஏறி
காலகாலம் பின்தொடர்ந்து
கலவிசெய்யும் இன்ப போகமே

கரியமேக மாய்த்திரண்டு
விழிஇரண்டு மேஇருண்டு
கடைசிநாளில் கூடும் ரோகமே!

சாதல்உண்டு என்றறிந்தும்
சக்தியுள்ள மட்டும்அந்த
சரஸமாடச் சொல்லும் தேகமே.

தாங்கொணாத துன்பமெய்தி
ஏங்கிஏங்கிக் காதலின்றி
தலைவன்பாதம் எய்தல் யோகமே!

ஆதலாலே மானிடர்கள்
இளமைநாளில் அவனைஎண்ணி
அடையவேண்டும் கருணை வெள்ளமே!

ஆதிமூலம் வேதமூலம்
நாதமூலம் கீதமூலம்
அந்தமூலம் பாடு உள்ளமே!



Courtesy: 
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment