Contact Us

Name

Email *

Message *

Monday 7 March 2016

Soundarya Lahari - Sloka: 32


Beneficial Results: 
ஸகல கார்ய ஜயம் Magnetic personality
Powers of alchemy, power to attract and success in business.


शिवः शक्तिः कामः क्षिति-रथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्र-स्तदनु च परा-मार-हरयः ।
अमी हृल्लेखाभि-स्तिसृभि-रवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥ ३२ ॥

ஸ்ரீவித்தை பஞ்சதசாக்ஷரி மந்த்ரம் [ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்] 

சிவ: சக்தி: காம: க்ஷிதி-ரத ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்-ததனு ச பரா-மார ஹரய: |
அமீ ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவாஸானேக்ஷு கடிதா
பஜந்தே-வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்  || 32 ||

இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பஞ்சதசாக்ஷரீ என்று கூறப்படும் மந்த்ரத்தின் அக்ஷரங்களை ரகஸியமாக விளக்குகிறார். எப்படி காயத்ரி மந்திரம் போன்றவை குரு முகமாக உபதேசம் செய்து கொள்ளல் அவசியமோ அது போன்றே இந்த மந்திரங்களும் குருமுகமாகவே உபதேசம் பெற்ற பின்னரே ஜபிக்க வேண்டும். இந்த பதினைந்தில் இருக்கும் அக்ஷரங்களாவது, சிவன், சக்தி, பிருத்வீ, சூர்ய, சந்திர, ஆகாச, இந்த்ர, ஹரி, பரா என்றவற்றுக்கான 9 பீஜங்களும், மன்மதனுக்கான 3 பீஜாக்ஷரங்களும், ஒவ்வொரு கூடத்தின் முடிவில் ஒரு புவனேஸ்வரி பீஜமாக மூன்று பீஜங்களைச் சேர்த்து வரும் 15 கலைகள்/அக்ஷரங்களே பஞ்சதசாக்ஷரீ. இவ்வாறாக மூன்று கூடங்களைக் கொண்டதாக இருந்தாலும் இத்துடன் ரமா பீஜத்தையும் சேர்த்து சொல்வதாலேயே மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்று லக்ஷ்மீதரர் சொல்லியிருக்கிறார்.

இந்த மந்திரமானது, ஹாதி வித்யா, மஹாவித்யா, துர்வாச வித்யா, லோபாமுத்ரா வித்யா, காதி வித்யா என்று பல ரிஷிகளின் பிரயோக முறையினை வைத்து சற்றே வேறுபடும். குருமுகமாக எது நமக்கு கிடைக்கிறதோ அதுவே தொடர்ந்து ஜபிக்க உகந்தது. ஆனந்த லஹரி பகுதியில் மிக முக்கியமான இரண்டு மந்த்ரார்த்தமான ஸ்லோகங்கள் என்றால் அது இந்த ஸ்லோகமும் அடுத்து வரும் ஸ்லோகமும் தான். பின்னர் செளந்தர்ய லஹரியில் நாம் பார்க்க இருக்கும் அன்னையின் செளந்தர்ய ரூபத்தை ப்ரத்யக்ஷமாக உணரச் செய்வது இந்த இரு ஸ்லோகங்களே என்று பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 30, 56

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • ஸ்ரீமத்வாக்பவ கூடைக 
  • ஸ்வரூபமுக பங்கஜா 
  • கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ 
  • ஸக்தி கூடைகதாபந்ந கட்யதோ பாகதாரிணீ 
  • மூலமந்த்ராத்மிகா 
  • மூலகூடத்ரய கலேபரா
  • ஸ்ரீஷோடசாக்ஷரீ வித்யா
  • ப்ரதிபந் முக்ய ராகாந்த 
  • திதி மண்டலபூஜிதா

śivaḥ śaktiḥ kāmaḥ kṣiti-ratha raviḥ śītakiraṇaḥ
smaro haṃsaḥ śakra-stadanu ca parā-māra-harayaḥ |
amī hṛllekhābhi-stisṛbhi-ravasāneṣu ghaṭitā
bhajante varṇāste tava janani nāmāvayavatām || 32 ||

She who is mother of us all,
The seed letter “ka” of my lord Shiva,
The seed letter “a” of goddess Shakthi,
The seed letter “ee” of the god of love,
The seed letter “la” of earth,
The seed letter “ha” of the sun god,
The seed letter “sa” of the moon with cool rays,
The seed letter “ka” of again the god of love,
The seed letter ”ha” of the sky,
The seed letter “la” of Indra , the king of devas,
The seed letter “sa” of Para,
The seed letter “ka” of the God of love,
The seed letter “la” of the Lord Vishnu,
Along with your seed letters “Hrim”,
Which joins at the end of each of the three holy wheels,
Become the holy word to worship you.

This stanza gives indirectly the most holy Pancha dasakshari manthra which consists of three parts viz., ka-aa-ee-la-hrim at the end of Vagbhava koota, ha-sa-ka-ha-la-hrin at the end of kama raja koota and sa-ka-la-hrim at the end of Shakthi koota. These parts are respectively called Vahni kundalini, Surya Kundalini and Soma kundalini.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:32, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.1050 -1055 of Deivathin Kural, 6th volume, 4th imprn.)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment