Contact Us

Name

Email *

Message *

Sunday 4 September 2016

Atmarpanastuti - Sloka 37


कीटा नागास्तरव इति वा किं न सन्ति स्थलेषु
त्वत्पादाम्भोरुहपरिमलोद्वाहिमन्दानिलेषु ।
तेष्वेकं वा सृज पुनरिमं नाथ दीनार्त्तिहारिन्
आतोषान्मां मृड भवमहाङ्गारनद्यां लुठन्तम् ॥ ३७॥

கீடா நாகாஸ்தரவ இதி வா கிம் ந ஸந்தி ஸ்தலேஷு
த்வத்பாதாம்போருஹபரிமளோத்வாஹிமந்தானிலேஷு |
தேஷ்வேகம் வா ஸ்ருஜ புனரிமம் நாத தீனார்த்திஹாரின்
ஆதோஷான்மாம் ம்ருட பவமஹாங்காரநத்யாம் லுடந்தம் || 37 || 

மனுஷ்ய ஜன்மம் தான் வேண்டுமென்று நான் கேட்க்கவில்லை. புழு பூச்சி பாம்பு மரம் என்றவாறு எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கின்றனவே! அவற்றில் ஒன்றாய் என்னைச் சிருஷ்டித்தாலும் சம்மதமே. ஆனால் அப்பிரதேசத்தில் நான் சஞ்சரிக்கும்மிடம் உன் பாதத்தில் பட்ட இளங்காற்று வீசுமிடமாக இருந்தால் போதும். இந்த ஜனன மரணமென்னும் நெருப்பு நதியில் கிடந்து புரளும் எனக்கு உன் சரணகமலத்தின் மணங்கமழும் ஜில்லென்ற மந்த மாருதம் ஆறுதலையளிக்கட்டும். அவ்விதம் நீ கிருபை செய்வாயானால் எவ்வளவு காலம் இந்த ஸம்ஸாரத்தில் என்னைத் தள்ளிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஆக்ஷேபணை இல்லை. கிலேசப்படுபவர்களின் கிலேசங்களை நீக்கும் கருணாநிதியான நீ இந்த வரம் கொடுக்க மறுப்பாயா?

kITA nAgAstarava iti vA kiM na santi sthaleShu
tvatpAdAmbhoruhaparimalodvAhimandAnileShu |
teShvekaM vA sRuja punarimaM nAtha dInArttihArin
AtoShAnmAM mRuDa bhavamahA~ggaranadyAM luThantam || 37 ||

Worms, mountains, trees and what else are not there in the places where the gentle breeze brings in the fragrance of Your lotus feet! Create me who am wallowing in this river of the embers of saMsAra as one of these (again and again) until You are satisfied. O Lord shiva, Remover of the suffering of the weak.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment