Contact Us

Name

Email *

Message *

Friday 27 January 2017

Soundarya Lahari - Sloka: 54


Beneficial Results: 
ஸர்வபாப நிவ்ருத்தி Destruction of all sins.
Cures venereal and kidney diseases. Relieves people of guilt, cleanses and rids of worst sins, elevation and purification.


पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये
दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं
त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥ ५४॥

முக்கண்ணின் கருணையும் மூவண்ண நதிகளும் 
[ஸர்வபாப நிவ்ருத்தி; உபஸ்தரோக நிவாரணம்]

பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி: |
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம் || 54 ||

அம்மா!, பசுபதியிடத்து மனதை உடையவளே, உலகத்தை பரிசுத்தமாக்கும் சோணா, கங்கை மற்றும் காளிந்தீ ஆகிய நதிகளின் சங்கமம் போன்று இருக்கும் உனது கண்களானது அந்த நதிகளைப் போன்றே சிகப்பு, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் என்னைப் போன்றவர்களை புனிதர்களாக்குவதற்கு கருணையுடன் இருக்கிறது.

சோணா நதீ என்பது சிகப்பு நிறம் உடையதாம்; கங்கை வெண்மையானது; யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது. இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை. இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.

பசுபதிபராதீந ஹ்ருதயே - பசுபதியினிடத்தே எப்போதும் ஈடுபட்ட மனத்தவளே; தயாமித்ரை - தயை/கருணையுடன் கூடிய; அருண தவள ச்யாம ருவிபி: - சிகப்பு, வெண்மை, கருமை போன்ற நிறங்களை உடைய; நேத்ரை: கண்களால்; இதி - இதுபோல்; த்ரயாணாம் தீர்த்தானாம் - மூன்று புண்ய தீர்த்தங்களைப் போல்; சோணா - சோணா நதி; கங்கா - கங்கா நதி; தபந தநயா - காளிந்தீ நதியின் இன்னொரு பெயர்; அமும் - பாபங்கள்; அநகம் ஸம்பேதம் - போக்ககூடிய ஸங்கமத்தை; பவித்ரீ - புனிதர்களாக; கர்த்தும் - செய்யும்; உபநயஸி - ஏற்படுத்துகிற; த்ருவம் - நிச்சயம்;

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 27

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:
  • சிவப்ரியா 
  • சிவபரா
  • தயாமூர்த்தி
  • ஸாந்த்ரகருணா
  • கருணாரஸ ஸாகரா

pavitrīkartuṃ naḥ paśupati-parādhīna-hṛdaye
dayāmitrai rnetrai-raruṇa-dhavala-śyāma rucibhiḥ |
nadaḥ śoṇo gaṅgā tapanatanayeti dhruvamum
trayāṇāṃ tīrthānā-mupanayasi sambheda-managham || 54 ||

She who has a heart owned by Pasupathi,
Your eyes which are the companions of mercy,
Coloured red, white and black,
Resemble the holy rivers ,
Sonabhadra , which is red,
Ganga which is white,
Yamuna , the daughter of Sun, which is black,
And is the confluence of these holy rivers,
Which remove all sins of the world.
We are certain and sure,
That you made this meet and join,
To make us, who see you, as holy.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment