Contact Us

Name

Email *

Message *

Wednesday 26 April 2017

Soundarya Lahari - Sloka: 60


Beneficial Results: 
வாக்குப்பலிதம் Prognostication
Great knowledge, skill in fine arts, eloquence, removes dumbness, provides power of foretelling future events.


सरस्वत्याः सूक्तीरमृतलहरीकौशलहरीः
पिबन्त्याः शर्वाणि श्रवणचुलुकाभ्यामविरलम् । 
चमत्कारश्लाघाचलितशिरसः कुण्डलगणो 
झणत्कारैस्तारैः प्रतिवचनमाचष्ट इव ते ॥ ६०॥

மதுரமான சொல்லோசை 
[வாக்குப்பலிதம்; ஊமையையும் பேச வைப்பது]

ஸரஸ்வத்யா: ஸுக்தீரம்ருதலஹரீகெளசலஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவணசுளுகாப்யாமவிரளம் |
சமத்காரச்லாகாசலிதசிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசநமசஷ்ட இவ தே || 60 ||

அம்மா!, பரமசிவன் பத்னியே, அம்ருதம் போன்ற இனிமையாக உனது பேச்சுக்களை இடைவிடாது கேட்டுக் கொண்டு இருக்கும் சரஸ்வதி தேவி, கேட்கும் ஆவலில் தலையை அசைத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வாறு தலையை அசைக்கும் சமயத்தில், அவள் தன் காதுகளில் அணிந்திருக்கும் குண்டலங்கள் அசைகிறது. அவ்வாறு சரஸ்வதியின் குண்டலங்கள் அசைவது, அவை உங்களது பேச்சுக்களை ஜணத்கார சப்தம் கொடுத்து ஆமோதிப்பது போல இருக்கிறது.

அன்னையின் குரல் இனிமையைக் குறிப்பதான ஸ்லோகம் இது. அம்பிகையின் பேச்சு அம்ருதத்தினைப் போல இருக்கும் என்கிறார். சரஸ்வதி அன்னையின் அருகில் எப்போதும் இருப்பதாகச் சொல்லி, அவள் அன்னையின் அம்ருத பிரவாஹத்தை விஞ்சும் இனிய குரலோசையை கைகளால் உணவை அள்ளி-அள்ளி உண்பது போல தலையை ஆட்டிக் கொண்டு காதுகளால் கேட்கிறாளாம். அப்போது சரஸ்வதியின் காதுகளில் இருக்கும் குண்டலங்களால் ஏற்படும் சப்தம் அன்னையின் பேச்சை கேட்டு வியந்து பதிலாக புகழ்ச்சி கோஷம் செய்வது போல இருக்கிறதாம்.

சர்வாணி - சர்வேசரனாகிய பரமசிவன் பத்னி; அம்ருதலஹரீ-கெளசலஹரீ - அம்ருதப் பிரவாஹத்தை விஞ்சும் இனிய பிரவாஹமான; தே ஸுக்தீ: - உன் பேச்சுக்களை; ச்ரவண சுளுகாப்யாம் - கைகளில் அள்ளிச் சாப்பிடுவது போல காதுகளால்; அவிரளம் - அப்போதைக்கபோது; பிபந்த்யா: - குடிப்பவள்; சமத்காரச்லாகா-சலிதசிரஸ: - பேச்சை மெச்சும்படியாக தலை அசைத்தல்; ஸரஸ்வத்யா: - சரஸ்வதியின்; குண்டலகண: குண்டலங்களின்; தாரை - உரத்த; ஜணத்காரை: - ஜண்-ஜண் என்னும் சப்தம்; ப்ரதிவசநம் - பதில்; ஆசஷ்ட இவ - சொல்வது போல்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 78

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • காவ்யாலாப விமோதிநீ 
  • சாரதாராத்யா 
  • ஸ்தோத்ரப்ரியா
  • ஸ்துதிமதீ
  • காநலோலுபா

sarasvatyāḥ sūktī-ramṛtalaharī kauśalaharīḥ
pibnatyāḥ śarvāṇi śravaṇa-culukābhyā-maviralam |
camatkāraḥ-ślāghācalita-śirasaḥ kuṇḍalagaṇo
jhaṇatkaraistāraiḥ prativacana-mācaṣṭa iva te || 60 ||

Oh Goddess , who is the consort of Lord Shiva,
Your sweet voice which resembles,
The continuous waves of nectar,
Fills the ear vessels of Saraswathi,
Without break,
And she shakes her head hither and thither,
And the sound made by her ear studs,
Appear as if they applaud your words.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - No digest available for this sloka.



Reference:
http://sanskritdocuments.org/
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment